திங்கள், 7 அக்டோபர், 2013

நான் கண்டவள்


தோகை விரித்து
சிறகினில்.....
மறைத்துக்கொண்டே
என்னுள்.......
 புதைந்துவிட்டவள்...!!!
கண்ணால்
கதை பேசி
இதயத்தில்
எனை சுமந்து
பகுத்தறிவில்
கலந்து விட்டவள்
நான்
பேசும் பொழுது
கணக்கெடுத்து
தான் பேசும்மொழியை
சுவையாய் தந்தவள்
என்னுள்
தன்னை புதைத்துக்கொண்டவள்
புரியாத புதிராக
 நான் வாடிய பொழுது
புதிராய் வந்து
ஒட்டிக்கொண்டவள்
இவள்
நான் கண்ட
புதுமைப் பெண்ணா
இல்லை நான்
போற்றும் புகழ்ச்சி பெண்ணா???
நான்
கண்டு கொண்டேன்
என்னுள் மட்டும்
அவள் இருப்பதை
இன்றோ
அவள் முகம் மலர்ந்தது
இந்த வரவுக்காகவே
வாழ்ந்தேன்
வாழ்ந்து கொண்டு
இருக்கின்றேன்.........

JAYA STUDIO

ALL WEDDING PHOTOGRAPHY AND CREATIVE WORKS